வதந்தி பரப்பும் பாஜக எம்.பி! அரசு தரப்பில் ஆதாரங்களுடன் மறுப்பு!!
ஒன்றிய ஆளும் அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 8 எம்.பி.க்கள் குழு கரூர் சம்பவத்தை ஆய்வு செய்ய வந்தனர். இந்தக் குழுவைச் சார்ந்த பாஜக எம்.பி. தேஜஸ்வி யாதவ், பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் பிரிவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
”கரூர் கூட்டநெரிசலில் சிக்கியவர்களை அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கவில்லை என்று பொய் சொன்ன பாஜக எம்பி பரவும் செய்தி “கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கியவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்காதது ஏன்?” என்று தேசிய ஜனநாயக கூட்டணி உண்மைக் கண்டறியும் குழு உறுப்பினரும் பாஜக எம்பியுமான தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் 11 பேர், அருகேயுள்ள அக்ஷயா என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு 6 ஐசியு படுக்கைகள் மட்டுமே இருந்துள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்களும் அங்குச் சென்றுள்ளனர்.
அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் நிவாரண நிதி காசோலை மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. வதந்திகளை நம்பாதீர்!” என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கரூர் கூட்டநெரிசலில் சிக்கியவர்களை அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கவில்லை என்று பொய் சொன்ன பாஜக எம்பி
— TN Fact Check (@tn_factcheck) October 1, 2025
பரவும் செய்தி
“கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கியவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்காதது ஏன்?” என்று தேசிய ஜனநாயக கூட்டணி… https://t.co/rXMwYcGTqC pic.twitter.com/w2p6sWaRE9
