போதைப் பொருள் வழக்கில் கைதாகும் பாஜக பிரமுகர்... பத்திரிக்கையாளர் பிரகாஷ் பகீர்!!

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவைத் தொடர்ந்து மேலும் பலர் கைதாவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பாஜக பிரமுகர் வினோஜ் பி. செல்வமும் விசாரணை வளையத்திற்குள் வருகிறார் என்று மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் கூறியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தாமோதரன் பிரகாஷ், ”சென்னை நகரில் எந்த குற்றம் நடந்தாலும் வினோஜ் பிசெல்வம் தலையிடுவார்.அமித்ஷாவை சந்தித்த மிளகாய் பொடி வெங்கடேசனின் அனைத்து குற்றசெயல்களுக்கும் உடந்தையான இவர்.சமீபத்தில் மிளகாய்பொடி வெங்கடேசன் சிக்கிய குற்றவழக்கிலும் இவர் பெயர் அடிபட்டது! போலிசாருக்கு வெயிட்டாக கவனித்து அதிலிருந்து தப்பினார்.
இப்போது போதை மருந்து கும்பலுடன் சேர்ந்து இவர் பெயர் அடிபடுகிறது.ஏகபட்ட கடன் பிரச்சனையுடன் பாஜகவிற்கு வந்த இவர் இன்று கோடிகளில் புரள்கிறார்.இவரது மோசடிகளில் ஒன்று சுரானா கம்பெனி.தங்கத்தை கொள்ளையடித்த அவர்களை பாஜகவிற்கு அறிமுகபடுத்தியதே வினோஜ்தான்.
காயத்ரி ரகுராமை அவமானபடுத்தி பாஜகவை விட்டு ஒடவைத்தவர் வினோஜ்.மதன் ரவிசந்திரன் என்கிற Honey trap video எடுக்கிற நபரை முதலில் வினோஜ் தான் கையாண்டார்.அதன் பிறகு அண்ணாமலை அவரை கையிலெடுத்தார்.டெல்லியிலுரெந்து வரும் பாஜக தலைவர்களுக்கு சப்ளை சர்வீஸ் செய்தே கோடிகளில் புரளும் வினோஜின் god father Vels university ஐசரி கணேஷ் தான்.
அவர் மூலம் போதை வழக்கிலிருந்து தப்பிக்க முயலும் வினோஜ் தான் அடுத்த தமிழக பாஜக பொது செயலாளராம்.பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு” என்று தெரிவித்துள்ளார்.