கள எதிரி பாஜக இல்லை! கனிமொழி எம்.பி ஆவேசம்!!

 
kanimozhi

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை திணிப்பு, எம்.பிக்களின் தொகுதிகள் எண்ணிக்கை குறைப்பு என திராவிட அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள பாஜக, திமுகவுக்கு எதிரி தாங்கள் தான் என்ற தோற்றமளிக்க முயற்சி செய்வது போல் அன்றாடம் திமுக மீது குற்றச்சாட்டுகளை குவித்த வண்ணம் இருக்கிறது. ரம்ஜான் நோன்பு அரிசி கிலோ 28 ஆயிரம் ரூபாய் என்ற பொய்யைக் கூட கூசாமல் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார் அக்கட்சியின் மாநில பொருளாளர்.

தேசிய ஊடகங்களிலும் திமுக vs பாஜக என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப்பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுகத் தலைவருமான கனிமொழி எம்.பி, களத்தில் எங்களுக்கு பாஜக எதிரியே இல்லை. எதிரிகளே இல்லாத களத்தில் திமுக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், 39 எம்.பி,க்கள் இருக்கும் போதே மிரட்டிப் பார்க்கும் பாஜக அரசு, எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைத்தால் என்ன நிலை ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்

From around the web