பாமக பிரச்சனைக்கும் பாஜகவும் சம்மந்தமில்லை.. நயினார் நாகேந்திரன் ஒப்புதல் வாக்குமூலம்?

 
nainar

செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாமகவில் நடக்கும் டாக்டர்.ராமதாஸ் அன்புமணிக்கு இடையேயான பிரச்சனைக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

உட்கட்சிப் பிரச்சனையை அந்தக் கட்சியினர் தான் பேசி முடிவு எடுக்க வேண்டும். டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று கூறினார் நயினார் நாகேந்திரன்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சமாதானம் பேச சென்றுள்ளாரே என்று கேட்கப்பட்ட போது, அது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் சென்றிருக்கலாம். அதற்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜகவின் தீவிர ஆதரவாளர், பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதனால் தான் குருமூர்த்தியின் சமாதான முயற்சிக்குப் பின் பாஜக இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பாமக இரண்டாக உடைந்தால் டாக்டர்.ராமதாஸ் திமுக பக்கம் சேரக்கூடும் என்று பாஜக கருதுவதால், குருமூர்த்தி மூலம் சமாதானப் பேச்சை தொடங்கியிருக்கிறார்கள் என்றே அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது. 

From around the web