சென்னை காவல் ஆணையர் மீது வழக்கு தொடர்ந்தது பாஜக!!

 
High-Court

சென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுத்து விட்டு ஆளுங்கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் 5 நாட்கள் முன்னதாகவே அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதியைக் காட்டி மறுத்துவிட்டு, ஆளுங்கட்சி எந்த விண்ணப்பமும் தராத நிலையிலும் அனுமதி வழங்கியுள்ளதால், விதிகளை மீறி செயல்பட்ட காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கும், டிஜிபி க்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் கனிமொழி எம்,பி தலைமையில், அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்ததாக, திமுகவினர் 3 ஆயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.

From around the web