முருக பக்தர்கள் ஓட்டு பாஜகவுக்கு கிடையாது.. சீமான் ஆவேசம்!!

 
Seeman

தமிழ்நாட்டில் முருகனுக்கென்று தனி மதிப்பு உண்டு. முருகனை முன்னிறுத்தினால் வாக்குகள் கிடைக்கும் என்று பாஜகவினர் கருதுகிறார்கள். அது நடக்காது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அரசமலை வையாபுரியில் செய்தியாளர்களிடம் சீமான் பேசினார்

”பாஜகவினர் முருகனை ஒப்புக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆனால், நாங்கள் உளமாறப் பிடிக்கிறோம். பாஜக நேற்று தொடங்கிய கட்சி அல்ல.அதேபோல, முருகனும் புதிதாகத் தோன்றவில்லை. இவ்வளவு நாள் முருக பக்தர்கள் மாநாட்டை ஏன் நடத்தவில்லை? ஆனால், நாங்கள் உளமாறப் பிடிக்கிறோம்.

பாஜக நேற்று தொடங்கிய கட்சி அல்ல.  முருகனும் புதிதாகத் தோன்றவில்லை. இவ்வளவு நாள் முருக பக்தர்கள் மாநாட்டை பாஜக ஏன் நடத்தவில்லை? தமிழ்நாட்டில் முருகனுக்கென்று தனி மதிப்பு உண்டு. எனவே, முருகனை முன்னிறுத்தினால் வாக்குகள் கிடைக்கும் என்று பாஜகவினர் கருதுகிறார்கள். அது நடக்காது” என்று சீமான் கூறினார்.

From around the web