கையெழுத்துக் கேட்ட பாஜக! வச்சி செஞ்ச நெட்டிசன்கள்!!
Mar 7, 2025, 08:10 IST

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கட்சியினருடன் கூட்டமாகச் சென்று கையெழுத்து பெற முயன்ற தமிழிசை சவுந்தரராஜனை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அனைவருக்கும் ஒரே கல்வி கையெழுத்திடுங்கள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்த நெட்டிசன்கள் பாஜக மீது வசைபாடியுள்ளனர். தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது. தமிழ் வாழ்க, இந்தி வேண்டாம் என்பது போன்ற சொற்களை கையெழுத்தாக எழுதி பதிவிட்டுள்ளனர்.
கையெழுத்து போட்டாச்சு மாமா.😂 pic.twitter.com/iRy38CsO6I
— M.Syedabthayar 🇮🇳 (@MSyedabthayar) March 7, 2025