பெரிய பாய்.. சின்ன பாய் எல்லாம் வேணாம்.. ஏ.ஆர்.ரஹ்மான் பதிலுக்கு அப்துல்லா எம்.பி.விளக்கம்!!

 
AR Rahman

நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி யுடனான பேட்டி ஒன்றில் பெரிய பாய் என்று  அழைக்கப்படுவது தனக்குப் பிடிக்கவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

பெரிய பாய் பாட்டுன்னா புடிக்காமப் போகுமா என்று டிடி கேட்க அது என்ன பெரிய பாய் சின்ன பாய் என்று ரஹ்மான் கேட்கிறார். உங்களுக்குத் தெரியாதா? அது தான் உங்க செல்லப்பெயர் என்று டிடி சொல்ல, புடிக்கல்ல என்கிறார் ரஹ்மான். அப்ப இன்னிக்கே கட் பண்ணிடலாம் என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்கு நகர்கிறார் டிடி.

இந்த காணொலி காட்சியி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்ல, பாய் என்று அழைப்பதை தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் யாருமே விரும்புவதில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்

”பாய் என்பது உருது/இந்தி சொல்.. தமிழை தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் பெரும்பாலும் பாய் என்று விளிக்கப்படுவதை விரும்புவதே இல்லை.. அண்ணே தம்பி மாப்ளை மச்சான் என்று அழைப்பதையே விரும்புவார்கள்.

சுருக்கமா சொல்லணும்னா எப்படி “ஜீ” என்ற வார்த்தை தமிழ் இந்துக்களுக்கு அலர்ஜியோ அது மாதிரி இது தமிழ் முஸ்லீம்களுக்கு!” என்று அப்துல்லா எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.


 

From around the web