கடலில் குளிக்கத் தடை! காவல் ஆணையர் உத்தரவு!!
Dec 28, 2024, 21:37 IST
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி மாலை முதல் ஜனவரி 1ம் தேதி வரை இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் தற்காலிக காவல் மையம் அமைத்தும் வாகனங்களில் சென்று போலீசார் கண்காணிப்பு செய்யவும் சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபரீதம் ஏதும் நிகழாமல் இருப்பதை தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.