மீண்டும் ஏவிஎம் சுடுகாடு? சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி எச்சரிக்கை!!

 
Vijayalakshmi

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீமானுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறமும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதிலும் காவல்துறையில் மனுக்கள் குவிந்து வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையும் சீமான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனவரி 20ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ”உங்களுக்கு என்னாச்சு, ஏன் இப்படி தப்புத் தப்பா பண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். பெரியார் ஆதரவாளர்கள் எல்லோரும் என் குடும்பம் மாதிரி. ஏன் பெரியாரைப் பத்தி இப்படி பேசுறீங்க. தயவு செய்து தமிழ்நாட்டை நிம்மதியா இருக்க விடுங்க சீமான். இப்படி நீங்க எல்லாரையும் கொந்தளிக்க வைப்பது உங்களுக்கு நல்லது பண்ணப் போறது இல்லே. எந்த ஏவிஎம் சுடுகாட்டிலே இருந்து நீங்க வாழ்க்கையை ஆரம்பிச்சிங்களோ, அதே ஏவிஎம் சுடுகாட்டுக்கு மீண்டும் போயிடாதீங்க” என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

ஆவேசமாகப் பேசியிருந்தாலும் சீமான் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் போலத்தான் நடிகை விஜயலட்சுமியின் வீடியோப் பதிவில் தெரிகிறது.

 


 

From around the web