ஆகஸ்ட் 7ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
Leave

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அகஸ்ட் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது கோட்டை மாரியம்மன் கோவில். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குகிறது. இதனால் “ப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி”ன்ற சிறப்புப் பெயரும் இந்த கோயிலுக்கு உண்டு.இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறுது வழக்கம். இந்த விழா தான் இந்த கோயிலின் மிகப்பெரிய விழாவாகும்.

Salem

இவ்விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும். இந்த பூச்சாட்டுதலின்போது சேலத்தில் உள்ள மற்ற 7 மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும். சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா ஆடி மாதம் பிறந்துவிட்ட நிலையில் விரைவில் நடைபெற போகிறது.

Local-holiday

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7- தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 31-ம் தேதி பணி நாளாக செயல்படும் என  மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

From around the web