ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் பொது விடுமுறை!

 
Ration-Shop

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2024-ம் ஆண்டில் 12 நாட்கள் பொதுவிடுமுறை தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்கள் 24 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பொது விடுமுறை நாட்களில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை என்பது வழங்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TN-Govt

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பொருந்தினாலும் கூட ரேஷன் கடைகளுக்கு ஆண்டுதோறும் தனியே பொது விடுமுறை தினம் என்பது அறிவிக்கப்படும். அதன்படி 2024-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொதுவிடுமுறை விடப்படும் நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பொது விடுமுறை பட்டியலை தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் வெளியிட்டுள்ளார். அதில், பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் உள்பட 12 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

Ration

அதன்படி பொங்கல் (ஜனவரி 15), தைப்பூசம் (ஜனவரி 25), குடியரசு தினம் (ஜனவரி 26), ரம்ஜான் (ஏப்ரல் 11), தமிழ் புத்தாண்டு/டாக்டர் பிஆர் அம்பேத்கர் பிறந்த தினம் (ஏப்ரல் 14), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 7), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), விஜயதசமி (அக்டோபர் 12), தீபாவளி (அக்டோபர் 31), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) என மொத்தம் 12 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web