பரபரப்பான சூழலில் தொடங்குகிறது சட்டமன்றக் கூட்டத்தொடர்!
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு அரசியலை திருமாவளவன், விஜய், ஆதவ் அர்ஜுனா சர்ச்சை ஆக்கிரமித்து இருந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது.
ஃபெஞ்சல் புயல் நிவாரணம், அரியாப்பட்டி டங்க்ஸ்டன் சுரங்கம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். பின்னர் கேள்வி நேரம் தொடங்க உள்ளாது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். அதைத் தொடர்ந்து 2024-25ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பின்னர் மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமையை ரத்து செய்யவும் மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்கள் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.