ஊரை சுற்றி ரூ. 53 லட்சம் கடன்.. இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு

 
Bodinayakanur

போடி அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் வஉசி நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் தனவந்தன் (26). இவர், போடியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரியா (23). இருவரும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக பலரிடம் அவர் கடன் வாங்கினார். நாளடைவில் அவருக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. அதில் ரூ.53 லட்சம் வரை முதலீடு செய்து தனவந்தன் இழந்ததாக கூறப்படுகிறது.

Suicide

கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்க தொடங்கினர். ஆனால் தனவந்தனால் பணத்தை திருப்பி தர முடியாமல் சிரமப்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களாகக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இரண்டு முறை இவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, தனவந்தனின் குடும்பத்தினர் விசுவாசபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனவந்தன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவிலுக்கு வீடு திரும்பிய அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் உள்ளே பார்த்த பொது தனவந்தன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

BodinayakanurTaluk PS

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து போடிநாயக்கனூர் தாலுகா காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட தனவந்தன் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

From around the web