ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி குடும்பத்தை கொல்வேன்.. மிரட்டல் கடிதத்தால் அயனாவரத்தில் குவிந்த போலீஸ்!

 
Armstrong

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பெரம்பூரில் உள்ள வீட்டிற்கு போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி தெருவில் புதிய வீட்டை கட்டி வந்த ஆம்ஸ்ட்ராங், அதே இடத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், கஞ்சா அஞ்சலை உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் கருதியதால் பழிக்கு பழியாக இந்த கொலை நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

chennai

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை அடையாளம் காட்ட சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் வழக்கறிஞர்கள். கைதாகி உள்ள 20 பேரின் சொத்துகளை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவுடி சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் தாய்லாந்து நாட்டிறகு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகியும் கஞ்சா வியாபாரியுமான அஞ்சலை, 4 இடங்களில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் சதி ஆலோசனை நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளாராம். புழல், அரக்கோணம், திருநின்றவூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Police

இந்த நிலையில் பெரம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவருடைய குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு சதீஷ் என்பவர் பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி, அவருடைய குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை இருக்கும் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பிடித்து செம்பியம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web