வெக்கமாக இல்லையா விஜய்? ஊடகவியலாளர் மில்ட்டன் காட்டம்!!
நீட் மட்டும் தான் உலகமா? நீட் தாண்டி நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு என்று பேசிய தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் மற்றும் அவருடைய கட்சி குறித்து விரிவாகப் பேசி வரும் ஊடகவியலாளர் மில்ட்டன், அனிதாவின் மரணத்திற்குச் சென்ற விஜய் ஏன் மாற்றிப் பேசுகிறார் என காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்பா தயவுல லயோலா காலேஜ்ல அட்மிசன் வாங்கி, அதையும் பாதில விட்டுட்டு நடிக்க போறேன்னு அப்பா சொத்தயே அழிச்சுட்டு தன்னோட வாழ்க்கைய தொடங்குற பகுமான வாழ்க்கை சூழல் எங்களுக்கு இல்ல விஜய்.
கஷ்டப்பட்டு படிக்கிறோம்… தகுதி இருந்தும் மருத்துவ படிப்பு மறுக்கப்படுகிறது. நீங்க வச்சுருக்க கட்சி அதுக்காக சண்ட செய்யுமா செய்யாதா? உங்க கிட்ட அதிகாரம் வந்தா எனக்காக போராடுவீங்களா மாட்டீங்களா? அத மட்டும் பேசுங்க… தங்கை அனிதா சாவுக்கு போயி இந்த வார்த்தைய தான் சொன்னீங்களா விஜய்? போன வருசம் நடத்துன நிகழ்ச்சில கூட வேற பேசுனீங்களே விஜய்?
நீங்க ஒரு கட்சி தலைவர், அதாவது நியாபகம் இருக்கா விஜய்..? அண்ணனாக சொன்னேன்… ஆயாவாக சொன்னேன்… போன்ற பூமர் வாதத்தை எடுத்து வராதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல.
நீட்க்கு எதிராக பேசினால் பிஜேபி தமிழனுக்கு எதிராக செய்யும் சதி வன்மம் குறித்து எல்லாம் பேச வேண்டி வரும். இதையெல்லாம் லாவகமாக மக்கள் மனங்களில் இருந்து அகற்றும் அசென்மெண்ட்க்காக உங்களையே விற்றுக்கொண்டீர்களே விஜய்! வெட்கமாக இல்லையா?" என்று மிகவும் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார் ஊடகவியலாளர் மில்ட்டன்.
அப்பா தயவுல லயோலா காலேஜ்ல அட்மிசன் வாங்கி, அதையும் பாதில விட்டுட்டு நடிக்க போறேன்னு அப்பா சொத்தயே அழிச்சுட்டு தன்னோட வாழ்க்கைய தொடங்குற பகுமான வாழ்க்கை சூழல் எங்களுக்கு இல்ல விஜய்.
— Milton (@Milton_Off) May 30, 2025
கஷ்டப்பட்டு படிக்கிறோம்…
தகுதி இருந்தும் மருத்துவ படிப்பு மறுக்கப்படுகிறது.
நீங்க வச்சுருக்க… pic.twitter.com/W5iVn7CpcE
