மணிப்பூர் வர்றீங்களா? விஜய் க்கு அண்ணாமலை சவால்!!

 
Annamalai

அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு யாரும் கிடைக்கவில்லையா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆரவ் அர்ஜுனா, விஜய் பேச்சுக்கள் குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சினிமாவில் உச்சத்தில் இருந்த அண்ணன் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியல் பற்றி ஜியோ பாலிட்டிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மணிப்பூர் பாருங்க என்று அண்ணன் சொல்கிறார்.பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, திரிபுரா மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். மேகாலயா மாநிலம், அஸ்ஸாம் மாநில மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். 2004ல் இருந்து வந்த ராணுவ  சட்டத்தை வாபஸ் பெற்று மணிப்பூர் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். மணிப்பூருக்கு என்னுடன் வாருங்கள்

 கோவா, மேகலாயா மாநிலங்களில் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஆதரவு தந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டிலும் இஸ்லாமிய சகோதரர்கள் பாஜகவுக்கு ஆதரவு தரத்தொடங்கியுள்ளார்கள். அண்ணன் விஜய் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

From around the web