கூட்டணிக்கு நாங்க தான் தலைமை? அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி?

மதுரையில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, திமுக ஆட்சியை மக்கள் தூக்கியெறிய தயாராகி விட்டார்கள்.2026ம் ஆண்டு பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசியுள்ளார். கூட்டணிக்கு கூட வேற வழியில்லாமல் ஒத்துக்கலாம், ஆனா கூட்டணி ஆட்சி என்றால் அதிமுக காணாமல் போய்விடும் என்று அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் அரக்கோணம் அருகே நடைபெற்ற எம்எல்ஏ சு.ரவியின் மகன் திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 6 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. 6 சட்ட கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. மேலும் 1850 அம்மா மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் வேளாண்மை கல்லூரிகள், குடிமராமத்து பணிகள், தடுப்பணைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். இக்கூட்டணியில் பல கட்சிகள் இணைய உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆனால் அதிமுக தான் ஆட்சியமைக்கும் கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்ல மறந்து விட்டார் போல எடப்பாடி பழனிசாமி.