இரண்டாந்தரக் குடிமக்களா தமிழர்கள்? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!!

உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் நாள்தோறும் கட்சியினருக்கு மடல் எழுதி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் இந்தித் திணிப்பை எதிர்த்து விரிவாக எழுதியுள்ள முதலமைச்சர், ”இந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்றும் அதனை யாரும் புறக்கணிக் கக் கூடாது என்றும் பா.ஜ.க.வினரும் அவர்களின் கொள்கை வழி அமைப்பினரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் திரு.ஓம் பிர்லா அவர்கள் சமஸ்கிருதம்தான் பாரதத்தின் மூலமொழி என்று அவையி லேயே குறிப்பிடுகிறார். இவை இரண்டுமே தவறான பரப்புரையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத்தான் மும்மொழிப் பாடத்திட்டத்தைவலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பா.ஜ.க. வினர் தங்கள் ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்?என்ற வேறுபாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும்.
ஒன்றிய கல்வி அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங் களின்அடிப்படையில் 2014ஆம் ஆண்டு முதல்2023ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,435 கோடி. இதே காலகட்டத்தில் மத்தியசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்குஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே. சமஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்டதில் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்குசெலவிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் முன்பைவிட பல மடங்குபணம் ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்டு வருகிறது. ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது ஒன்றிய அரசு. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தராமல் வஞ்சிப்பது போலவே தமிழுக்குரிய நிதியையும் ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழைப் போலவே இந்தியாவின்பிறமாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது. மொழித்திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதைஉலக சரித்திரத்தைப் புரட்டினால்புரிந்து கொள்ளலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.