விஜய் மீது வன்மத்துடன் செயல்படுகிறாரார்களா ரஜினியும் லதா ரஜினிகாந்தும்?

 
Latha Rajinikanth Latha Rajinikanth

கரூரில் விஜய் கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த பெருந்துயர சம்பவம் மனிதாபிமானம் கொண்ட அனைவருடைய கண்களையும் குளமாக்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இரவோடு இரவாக ஓடோடிச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே சந்தேகப்படும் மக்களும் இருக்கிறார்கள்.

இந்த துயரச் சம்பவத்திற்கு, ஒரு சில மணி நேரங்களிலேயே எக்ஸ் தளத்தில் தன்னுடைய துக்கத்தை பகிர்ந்து இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஏற்கனவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஏழாம் பொறுத்தமாக இருக்கும் நிலையில் ரஜினியின் எக்ஸ் தளப் பதிவு விஜய் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. நடந்த சம்பவத்தை பெரிது படுத்தும் செயல் என்றே பக்குவமடையாத விஜய் ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

”கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்” என்ற ரஜினியின் பதிவு உண்மையிலேயே அவருடைய வருத்தத்தைத் தான் தெரியப்படுத்துகிறது. இதில் எந்த ஒரு உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் விஜய் ரசிகர்களின் எதிர்வினைகள், ரஜினி ரசிகர்களை முற்றிலும் விஜய்க்கு எதிரான ஓரணியில் திருப்பிவிட்டது என்பதை தவெக வினர் உணரப்போவதும் இல்லை. ரஜினியின் பதிவை நடுநிலையுடன்  அணுகினாலும், லதா ரஜினிகாந்தின் வீடியோ பதிவு இந்த நேரத்தில் தேவை தானா என்ற கேள்வியை முற்றிலுமாக புறம் தள்ள முடியவில்லை.

மிகவும் உருக்கமாகத் தான் லதா ரஜினிகாந்த் பேசியிருக்கார்.  ஆனாலும், தன் கணவர் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஆதங்கத்தில் விஜய் அரசியலுக்கு எதிராகப் பேசும் வாய்ப்பாக இதை லதா ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொண்டாரோ என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

From around the web