அரசுப் பள்ளிகள் தனியார் மயமாகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது என்ன?
அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அரசுப் பள்ளிகளை மட்டம் தட்டும் வகையில் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், திமுக அரசு பதவேற்ற பிறகு அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாக, அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது போல் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து மூத்த ஊடகவியலாளர் செந்திவேல் கருத்து தெரிவித்துள்ளார்.
”அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது போல் ஒரு பொய்ச் செய்தி உருவாக்கப்படுகிறது.. அரசோ, அமைச்சரோ எந்த உத்தரவும் அவ்வாறு கொடுக்கவில்லை.. செய்தியின் உண்மைத் தன்மையை அறிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை.ஆனால் மிக வேகமாக கண்டனங்கள் வீசப்படுகின்றன.தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களின் CSR நிதியில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவத் தயார் என்று சொன்னதை திரித்து விட்டனர்.. இதோ அச்சங்கத்தின் விளக்கம்..அந்த விழாவில் அமைச்சர் பேசியதையும் பார்த்தேன. அரசுப் பள்ளிகளுக்கு CSR நிதியில் இருந்த உதவ தாங்கள் தயாராக இருப்பதாக தனியார் பள்ளி சங்கத்தினர் தெரிவித்த கருத்திற்கு நாகரீகத்தோடு நன்றி கூறுகிறார் அமைச்சர்.
அவ்வளவே. மிகச் சமீபத்தில்தான் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் வெளி நாடு சென்று வந்தனர்.. உயர்வுக்குப் படி என்ற திட்டம் இடை நிற்றலை இல்லாமல் ஆக்கியுள்ளது.. புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.. தமிழக பள்ளிக் கல்வித்துறை மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது.. அதை பாராட்ட மனமில்லாத கூட்டம் சேற்றை வாரி இரைப்பது கண்டிக்கத்தக்கது” என்று மூத்த ஊடகவியலாளார் செந்தில்வேல் கூறியுள்ளார்