தமிழ்நாட்டில் தேச விரோத ஆட்சி! கோவையில் அமித்ஷா சர்ச்சைப் பேச்சு!!

 
Amit shah

கோயமுத்தூருக்கு 3 நாட்கள் பயணமாக வந்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சைக்குரிய வகையில் தமிழ்நாடு அரசு குறித்து பேசியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜ மாவட்டத் தலைமை அலுவலகத்தை  திறந்து வைத்து கட்சி தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா பேசினார்.

”உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழிலே என்னால் பேச முடியவில்லை என்பதை வருத்தத்தோடு, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மக்களின் வாழ்வியல், மொழி வளம், கலாச்சாரம், ஆகியவற்றை மதிக்கக்கூடிய, போற்றக்கூடிய ஒரு தலைவராக மோடி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் நம் முன்னோர் மூவேந்தர்களின் கையை அலங்கரித்த செங்கோல் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் இருக்கும் பாராளுமன்ற சீட்டுகளில் ஒன்று கூட குறையாது. கூடுதல் தொகுதிகள்தான் கிடைக்கும் என்று பிரதமர் உறுதிப்படுத்தி இருக்கிறார். மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யாமல் விகிதாச்சார அடிப்படையில் செய்யப்பட்டு, சீட்டுகள் ஒதுக்கப்படும்

இதில் கூடுதலான சீட்டுகள் கிடைக்குமே தவிர, யாருக்கும் எந்த குறைவும் ஏற்படாது. 2004-14 பத்தாண்டு கால ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுத்த தொகை, ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 900 ஒரு கோடி ரூபாய். இதைவிட 2014 – 2024 வரையிலான காலத்தில் ஐந்து மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டு உள்ளது” என்று பேசிய அமித் ஷா, ”தமிழ்நாட்டில் உள்ள தேச விரோத ஆட்சியை அகற்ற வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

பாராளுமன்றத் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ள அமித் ஷா, தற்போது உள்ள எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதை தெளிவு படுத்தவில்லை, அதைத் தான் முதலமைச்சர் எதிர்க்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

From around the web