சாதி ஒழிப்பே தமிழ்த் தேசியம்... நடிகர் சத்யராஜ் அதிரடி!!

 
Satyaraj

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் சாதி ஒழிப்பே தமிழ்த் தேசியம் என்று கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  ஆண்டுதோறும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், மார்க்ஸ் மாமணி, அயோத்தி தாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

2025ம் ஆண்டுக்கான பெரியார் ஒளி விருது நடிகர் சத்யராஜுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சத்யராஜ், சாதி ஒழிப்பே தமிழ்த் தேசியம் என்று கூறினார். தந்தை பெரியார் கம்யூனிஸ்ட் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர். ஆனால் ஏழைகள் ஒழிப்பை விட முதலில் சாதி ஒழிப்பையே செய்ய வேண்டும் என்று சொன்னார்.

ஏழ்மை நிலையிலிருந்து ஒருவர் முன்னேறி வசதி வாய்ப்புகள் பெற்றாலும் சாதியின் அடிப்படையில் கீழானவராகவே பார்க்கப்படுகிறார். அதனால் சாதியை முதலில் ஒழிக்க வேண்டும் என்று பெரியார் கூறினார். அந்த அடிப்படையில் சாதி ஒழிப்பே  தமிழ்த் தேசியம் என்று சத்யரஜ் கூறியுள்ளார்.

From around the web