அண்ணாமலையின் படிப்பு என் மண்ணுக்கு சமம்! ஆவேசப்படும் பிரபலம்!

 
Annamalai Annamalai

பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் ரங்கசுவாமி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை அசால்டாக அள்ளியுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் தங்கள் எக்ஸ் தளத்தில் மறுபதிவு செய்துள்ளனர். முன்னதாக அண்ணாமலை குறித்து பிரசாந்த் ஆங்கிலத்தில் பதிவிட்டு இருந்தார். அதில தலைவர்கள் அவர்களுடைய பண்புகளாலும் மக்களுக்கு அளித்த வாக்குகளை நிறைவேற்றுவதாலும் உருவாகிறார்கள். நீங்கள் கோவைக்கு கொடுத்த 100 வாக்குறுதிகளும் உங்கள் தலைமைப் பண்பு பற்றி பளிச்சென்று எடுத்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள். நாங்கள் உங்களை மதிப்போம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு ஒரு அண்ணாமலையின் ஆதரவாளர் அண்ணாமலையின் படிப்பு குறித்து எந்த ஆதரவும் இல்லாமல் அரசியலுக்கு வந்து பாஜகவை வளர்த்துள்ளார் என்று பதிலளித்துள்ளார். இந்தப் பதிலில் காட்டமான பிரசாந்த்,

”52 ஏக்கர் விவசாய நிலம் - ஒரு ஏக்கர் 50 லட்சம் என்று குறைத்து மதிப்பிட்டால் கூட 25 கோடிக்கு நிலம் வைத்திருக்கும் ஜமீன் இவர் , ஆக பரம்பரையாய் காசுக்கு பஞ்சமே இல்லாத குடும்பம் - ஏழ்மை என்பது ஊரை ஏமாற்ற கட்டமைக்க பட்ட பிம்பம் . பள்ளி பருவத்தில் இருந்து உருவாக்கப்படும் பல ஆயிரம் RSS ப்ரொஜெக்ட்டில் இவரும் ஒருவர் . இவருக்கு அரசியல் எதிர்காலம் என்பது RSS முடிவு செய்தது , மக்களை காப்பாற்ற அவர் மனதில் தானாய் தோன்றி நடந்த விஷயம் அல்ல ! மக்களை இந்த மண்ணை நேசிக்கும் தகுதி இருந்தாலே அவன் தலைவன் . எவ்வளவு மெத்த படித்தவராக இருந்தாலும் , என் மண்ணுக்கு எதிரான விஷயங்கள் செய்யும் போது , அவர் வாங்கிய பட்டமெல்லாம் மண்ணுக்கு சமமாகிறது !” என்று பதிலளித்துள்ளார்.


 

From around the web