பாஜகவினரை திட்டமிட்டு இழுக்கும் அதிமுக... எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

 
Annamalai-EPS

பாஜகவினரை அதிமுக திட்டமிட்டே இழுப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த நிர்மல் குமார் நேற்று முந்தினம் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 420 மலை, திமுக அமைச்சருடன் ரகசியமாக பேசுகிறார், மனநலம் குன்றியவர் போல் நடந்துகொள்கிறார் பாஜகவினரை செருப்பாக பயன்படுத்துகிறார் என பல்வேறு விமர்சனங்களை நிர்மல் குமார் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகிவில் இணைந்தார். 

அதனை தொடர்ந்து, நேற்று மதியம் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணனும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ஒரு படி மேலே போய் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். “பாஜக மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை பொன். பாலகனபதியை அசிங்கப்படுத்தினார் என்றும், நைனார் நாகேந்திரனை மனிதனாக கூட மதித்தது இல்லை.” என்று விமர்சித்தார்.

CTR-EPS

பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவில் இருந்து இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களை இழுக்கும் நிலையில் அதிமுக உள்ளது. பாஜகவில் இருந்து ஆட்களை கொண்டுச் சென்றால்தான் அதிமுக வளரும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட தலைவர்களை அதிமுக இழுப்பதாக குற்றம்சாட்டினார். இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது. பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லதுதான்; அப்போது தான் புதியவர்களுக்கு பதவி வழங்க முடியும். பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.

Annamalai

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பாஜகவினரை இணைத்துக் கொண்டு தாங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயிற்சிப்பதாக விமர்சனம் செய்தார். கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ அதை துணிந்து எடுத்துக் கொண்டே இருப்பேன். வரும் காலத்தில் இன்னும் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது என தெரிவித்தார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்கள் அண்ணாமலை மீது வைத்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.

From around the web