வைரலாகும் அன்புமணி ராமதாஸ் புகைப்படம் ! அதுல அப்படி என்ன இருக்கு ?
Dec 11, 2024, 07:09 IST
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் படம் ஒன்று சமூகத்தளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
குழந்தை ஒருவருக்கு இதயத் துடிப்பை பயக்கும் மருத்துவராக அந்தப் படம் உள்ளது. இதயத்தில் ஸ்டெதஸ்கோப் வைத்து விட்டு அதை காதில் பொறுத்தாமலே, கழுத்தில் மாட்டிக்கொண்டு இதயத்துடிப்பை பார்ப்பது போல உள்ளது அந்தப்படம்.
டாக்டர் ஸ்டெதஸ்கோப்பை காதில் வைக்க மறந்துட்டீங்க என்ற வாக்கியத்துடன் உள்ள இந்தப் படம் தான் இப்போது சமூகத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது