டெல்லியில் அன்புமணி.. அமெரிக்காவில் சௌம்யா அன்புமணி.. என்ன நடக்கிறது பாமகவில்!!

 
Soumya

டெல்லியில் பாமக தலைவர் அன்புமணி முகாமிட்டுள்ள நிலையில் அவருடைய மனைவியும் தர்மபுரி பாமக பாராளுமன்ற வேட்பாளருமான சௌம்யா அன்புமணி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே நடைபெறும் தமிழர் விழாவில் பங்கேற்றுள்ள சௌம்யா அன்புமணி வேறு சில முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மற்றொரு முக்கிய பிரிவான ஹெச்.எஸ்.எஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில்பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றா ஹௌடி மோடி நிகழ்ச்சியை முன் நின்று நடத்தியது இந்த அமைப்பு தான். ஹெச்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் பாஜகவில் அதிக செல்வாக்கு உண்டு. அந்தத் தலைவர்களில் சிலரைச் சந்திக்க சௌம்யா அன்புமணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாமக பிளவுபடுவதை விரும்பாத பாஜக, டாக்டர் ராமதாஸ் - அன்புமணி விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வதை விரும்பவில்லை.அன்புமணிக்கு பாமக தொண்டர்கள் ஆதரவு கிடையாது என்பது பாஜகவுக்கு நன்றாகவேத் தெரியும். கட்சி உடைந்தால் தொண்டர்கள் டாக்டர்.ராமதாஸ் பக்கம் தான் இருப்பார்கள். அவர் திமுக அணிக்குச் சென்றுவிடுவார். முதலுக்கே மோசமாகிவிடும்.வட மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஒரு சீட் கூட தேறாது என்பதை நன்றாகவே உணர்ந்தவர்கள் பாஜகவினர்.

குருமூர்த்தியின் சமரச முயற்சியும் எடுபடவில்லை. அன்புமணி கட்சியை உடைக்க டெல்லி உதவியை நாடுவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாமக கொறடாவை மாற்ற வேண்டும் என்று அன்புமணியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அப்பாவு விடம் மனு கொடுத்துள்ளனர்.

கணவரின் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் தான் சௌம்யா அன்புமணியின் அமெரிக்கப் பயணம் உள்ளது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் நடந்த தமிழர் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நடிகர் நெப்போலியனையும் சந்தித்துள்ளார் சௌமியா அன்புமணி. நெப்போலியனுடன் அரசியல் பேசினாரா என்று தெரியவில்லை. பாஜகவில் சேர்ந்த பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கியே நெப்போலியன் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 பாமகவில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் சௌம்யா அன்புமணியின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜகவை சமாதானப்படுத்தி பாமகவை பிரிக்கும் முயற்சியில் அன்புமணி உள்ளார் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

- ஸ்கார்ப்பியன்

 

From around the web