க்யூ ஆர் கோட் மூலம் பணம் வசூலிக்கும் அன்புமணி... ஆடிட்டர் மூலம் கடிவாளம் போடும் ராமதாஸ்!!

 
Anbumani

பாமகவில் டாக்டர்.ராமதாஸ் மகன் அன்புமணி இடையேயான உச்சக்கட்ட மோதல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கட்சிக்கு நிதி வழங்குங்கள் என்று க்யூ ஆர் கோட் அறிமுகம் செய்துள்ளார் அன்புமணி.

அதே வேளையில் கட்சியின் பொருளாளர் திலகபாமா வை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளார் ராமதாஸ். மேலும் ஆடிட்டருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறும் ராமதாஸ், கட்சியின் நிதி விவகாரத்தை கையிலெடுக்கும் முயற்சியில உள்ளார்.

 ஏற்கனவே கட்சி நிதி விவகாரங்களை ராமதாஸ் தான் கவனித்து வந்தார். தற்போது அன்புமணி நிதி வசூலிப்பதை தடுக்கவே ராமதாஸ் ஆடிட்டருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அன்புமணியுடன் மோதல் முற்றிய நிலையில் ஆடிட்டருடன் ராமதாஸ் நடத்திய இந்த ஆலோசனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web