ஆண்களுக்கு ரூ.1,100 ஊக்கத்தொகை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 
OPeration

இலவச குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யும் ஆண்களுக்கு 1,100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பெண் கரு மற்றும் சிசுக்கொலை, ஊட்டச்சத்து குறைபாடு, மாதவிடாய் பிரச்னை, இளம் வயது திருமணம், பாலின பாகுபாடு மற்றும் உயர்வரிசை போன்ற இன்னல்களில் இருந்து தாய்மார்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. விரும்பாத கர்ப்பங்களை தவிர்க்கும் பொருட்டு அவசரகால மாத்திரைகள், 9 வார காலத்திற்கு உட்பட்ட விரும்பாத கர்ப்பங்களை தவிர்க்க மாத்திரைகள், ஆரோக்கியமாக பிறப்பு இடைவெளிக்கான பல்வேறு தற்காலிக கருத்தடை முறைகள் மற்றும் நிரந்தர குடும்ப நல அறுவை சிகிச்சைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

குடும்ப நல திட்டத்தில் ஆண்களின் பங்கெடுப்பை அதிகரிப்பதின் மூலம் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்ற நோக்கத்துடன் குடும்ப நல திட்டத்தில் ஆண்களுக்கான பங்களிப்பாக மிகவும் எளிமையான, பாதுகாப்பான நவீன குடும்ப நல சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Operation

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை வார விழா கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆண்களுக்கு இலவச குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட மருத்துவ, ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் பொறுப்பு சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதன் பேரில் வருகிற 28-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெறும்.

Money

இலவசமாக செய்யப்படும் இந்த ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அரசின் சார்பாக ரூ. 1,100 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதில் தகுதியுள்ள அனைத்து ஆண்களும் நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டு பயன்பெறலாம்.” என்று கூறினார்.

கடந்த 2022-23-ம் ஆண்டில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை (வாசக்டமி) தமிழ்நாடு முழுவதும் 7,000 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 1,304 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மொத்தமாக, 18.6 சதவீதம் மட்டுமே இலக்கு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web