அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா.. முதலைகண்ணீர் வடிக்கிறார் முதல்வர்.. ஈபிஎஸ் கண்டனம்
அம்மா உணவகத்தை ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை திமுக அரசின் முதல்வர் அரங்கேற்றியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 19) ஆய்வு செய்தார். பின்னர், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அம்மா உணவகத்தை ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை திமுக அரசின் முதல்வர் அரங்கேற்றியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்துவிட்டு தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?
ஏழை, எளியவர்களின் அன்னலட்சுமியாக திகழ்ந்த அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்து, தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கும் விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு கண்டனம் !
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) July 20, 2024
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. #AmmaUnavagam pic.twitter.com/VjVDLTxu60
தமிழகத்தின் அன்னலட்சுமியாக செயல்படும் அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவகங்களை திமுக அரசு மூடி உள்ளது. வாய்பந்தல் போடாமல் மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன் புதிய உணவகங்களையும் திறக்க வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.