அமித்ஷா மதுரை வருகை.. ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்திய பாஜக வீடியோ வைரல்!!

 
BJP Odissa advt BJP Odissa advt

மதுரையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்டுப் பேசினார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா. மேலும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பறைசாற்றினார்.

இந்நிலையில் ஒடிசா தேர்தலின் போது பூரி ஜெகன்னாத் ஆலயத்தின் சாவிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று பேசிய பேச்சும், தமிழன் ஒடிசாவை ஆள்வதா என்ற கேள்வியுடன், தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான வீடியோவும் மீண்டும் சமூகத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசாவின் உணவை வாழை இலையில் ஊற்றி சாப்பிடமுடியாமல் தடுமாறும் தமிழர் என்ற வகையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவுடன் பாஜகவை நோக்கு பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.


 

From around the web