விறுவிறுப்பாக நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி.. சிறப்பு பரிசு என்ன தெரியுமா?

 
Madurai

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 1,200 காளைகள் சீறிப்பாய்கின்றன. இதில் 700 மாடுபிடிவீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

alanganallur

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாடு பிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடந்தது. மாடுகளுக்கும் அதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு இந்த போட்டிக்காக பரிசுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

இந்த விழாவில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு பல சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எல்லா வருடமும் இந்த போட்டியில் வழங்கப்பட்டு வரும் பரிசுகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் வெறும் பாத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இப்போதெல்லாம், கார், பைக், ஏசி என்று மிகவும் விலை அதிகமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

alanganallur

சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடக்கும் போட்டிகளை துவக்கி வைத்துள்ளார்.

From around the web