அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! இன்பநிதியுடன் வந்த உதயநிதி ஸ்டாலின்!!

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உடன் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.
முதல்முறையாக தந்தையுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வந்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி. பார்வையாளர்கள் மத்தியில் இன்பநிதியைப் பார்த்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காகத் தான் அப்பாவுடன் வந்தாரா? அல்லது அரசியல் முகமாக இப்போதே அறிமுகப்படுத்தும் வகையில் பொது நிகழ்ச்சிகளுக்கு மகனை அழைத்து வருகிறாரா உதயநிதி என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கடந்த வாரம் சென்னையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை படத்தின் விழாவுக்கும் இன்பநிதி வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.