அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ! துணை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!!

 
ஜல்லிக்கட்டு

அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு என தனி மைதானம் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 16ம் தேதி அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பெருந்திளராக வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web