அதிமுக - பாஜக நல்ல கூட்டணி! உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!!

 
ராஜாஜி செய்ததையே அமித்ஷாவும் செய்கிறார் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

டாக்டர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்புகள் நாடுமுழுவதும் எழுந்துள்ளது. டூரிஸ்ட் கைடு வேலை பார்க்க வேண்டாம் என்று மிகவும் காட்டமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்ட போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது தான் என் கருத்து என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்,

இதைக் குறிப்பிட்ட உதயநிதி, அமித்ஷாவின் பேச்சு பாஜகவுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் கூறியிருந்தார் ஜெயக்குமார். இதையே தன் கருத்து என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். பாஜகவுக்கு பின் விளைவுகள் ஏற்படுத்தும் என தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருத்தருக்கும் தெரியும்.

அமித்ஷாவை கண்டிக்காத அதிமுக பாஜகவுடன் கள்ளக்கூட்டணி அல்ல, நல்ல கூட்டணியே வைத்துள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web