அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
Dec 13, 2024, 22:18 IST
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15ம் தேதி சென்னையில் கூடுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலம் தொட்டே வழக்கமாக அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தரப்பில் செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.
அமமுக என்று டிடிவி தினகரன் தனியாகச் சென்றுவிட. அதிமுக தொண்டர் நல மீட்புக்குழு என்று ஓ.பன்னீர்செல்வம் தனியாக நின்று வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று சசிகலா ஒருபக்கம் குரல் கொடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.