விஜய் வந்த பிறகு சீமான், அண்ணாமலையை ஊடகங்கள் சீண்டுவதில்லையா?

 
நோட்டை மாற்றுமுன் நாட்டை மாற்ற வேண்டும்! – சீமான்

பிரபாகரனை சந்திச்ச பிறகுதான் பெரியார் மீதான பித்து தெளிஞ்சுதாம், சீமான் சொல்கிறார். ஆனால், பிரபாகரன் மீது தமிழ்நாட்டில் ஒரு பித்து நிலையை உருவாக்கியதே பல பெரியாரிய அமைப்புகள்தான்.

பிரபாகரனுடன் நடந்த அந்த மூணு நிமிட சந்திப்பில் ஆமைக்கறி சாப்பிட்டு, பிரபாகரனுக்கே துவக்கு பிடிக்க கத்துக்குடுத்து, மிச்சமிருக்கிற நேரத்துல பெரியாரியம் பத்தி பேசியிருக்கார் போலருக்கு. ஆனா அதுக்குப் பிறகுதான் ஆயிரத்தெட்டு மேடையில பெரியாரை முப்பாட்டன், அறிவுத்தகப்பன், வழிகாட்டின்னு பேசினார்.

முதலில், இவ்வளவு நாள் இந்த பேர்வழியை தூக்கிச் சுமந்தவர்கள், disown செய்ய வேண்டும். சீமான் தமிழ்நாட்டு அரசியலில் முற்று முழுதாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

விஜய் வருகைக்குப் பிறகு சீமான், அண்ணாமலை வகையறாக்களை ஊடகங்கள் சீண்டுவதில்லை. இதனால் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டு அட்டென்சன் சீக்கிங் செய்கிறார் என்றால் இந்த ஆள் இதுபோன்று இறங்கியிருக்கிறார்.

இவர்கள் எல்லோருமே செய்வது ஒன்றுதான். மாமூல் வசூலிக்க பெரிய தாதா வருவதற்கு முன்பு அல்லக்கைகள் வந்து சவுண்ட் கொடுத்து ரூட் க்ளியர் செய்வார்கள். பாஜக என்னும் பெரிய தாதாவுக்கு இவர்கள் ரூட் க்ளியர் செய்கின்றனர்.

- பாரதி தம்பி, எழுத்தாளர்.

From around the web