தலைக்கேறிய போதை... நடுரோட்டில் இளம்பெண் செய்த அட்ராசிட்டி.. பரபரப்பு வீடியோ

 
Erode

ஈரோட்டில் போதையிலிருந்த இளம் பெண் ஒருவர் கடுமையான ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்குலட்சுமி (35). இவருக்கு திருமணமாகி கணவர் இறந்த நிலையில், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். அவ்வப்போது கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்து அன்றாட வாழ்க்கையை அவர் நடத்தி வந்துள்ளார். வாழ்வாதாரத்துக்கு வேறு ஏதாவது ஒரு தொழிலை செய்ய முடிவு செய்த அங்குலட்சுமி, தள்ளு வண்டியில் சோளக்கருது விற்கும் தொழிலை துவங்கியுள்ளார். இதனிடையே, கணவன் இறந்ததுமே, அங்குலட்சுமிக்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேரந்து மது மற்றும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் கடை வியாபாரத்தை முடித்த அங்குலட்சுமி, 8 மணி அளவில், தான் வசிக்கும் குமாரபாளையத்திலிருந்து ஈரோடு மரப்பாலம் பகுதிக்கு வந்தார். அப்போது தன்னிடம் இருந்த பணத்தை கொண்டு மது அருந்திவிட்டு, கஞ்சாவை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

Erode

இதனையடுத்து அளவுக்கு அதிகமான போதை தலைக்கேறியதால், மரப்பாலம் பகுதியில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாநகரின் பிரதான மையப் பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பிற்கு வந்தார். வரும் வழியில் உள்ள சாலையில் சென்றவர்களிடம் ரகலையில் ஈடுபட்டதுடன், அரசு பேருந்தை வழிமறித்து நின்று சிறிது நேரம் ஆட்டம் போட்டு உள்ளார்.

அப்போது அங்கு இருந்தவர்கள் அங்குலட்சுமியிடம் சென்று விசாரித்தனர், அவ்வாறு விசாரித்த ஒருவருக்கு அங்குலட்சுமி தர்ம அடி கொடுத்துள்ளார். அப்போதுதான் அவர் மது மற்றும் கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்து. அவருக்கு உதவி செய்ய வந்தவர்கள் அனைவரும் விலகிச் சென்றனர். இதனையடுத்து  அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில்  இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு லட்சுமியை சமாதானப் படுத்த முயன்றனர். 

ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் அங்கு வருவோர் போவோரை எல்லாம் அடிக்கப் பாய்ந்தார், மேலும் அந்த வழியே சென்ற பேருந்து ஒன்றினை வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனையும் செய்தார். சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு போலீசார் அங்கு லட்சுமியின் கைகளை பின்புறமாக அந்த லட்சுமியின் துப்பட்டாவால் கட்டி, ஆட்டோவில் ஏற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக் குழுவில் உள்ள புறநகர் காவல் நிலையத்தில் அங்கு லட்சுமி குறித்த தகவலை கேட்பதற்காகவும் ஏன் இவ்வாறு செய்கிறார் என்பதை பற்றியும் விசாரிப்பதற்காக முயற்சித்த போது, அங்கும் தரையில் உருண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளார்,  


இதனையடுத்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஊழியர்களும், காவல்துறையினரும் அவரை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போது "வரமாட்டேன்" எனக்கூறி தொடர் அலப்பறையில் ஈடுபட்டதால், மிகுந்த சிரமத்திற்கு பிறகு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அவரது கை கால்களை கட்டினர், அங்குலட்சுமி தொடர்ந்து சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் கூச்சலிட்டுக்  கொண்டே இருந்ததால் வலுக்கட்டாயமாக அவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது, இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர். 

ஆனால், அவரது குடும்பத்தினர் எவரும் அங்கு லட்சுமி அழைத்துச் செல்ல முன்வரவில்லை, இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பில் அவர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும், அங்குலட்சுமி உறவினர் என கூறி ஒருவர் அங்கு வந்தார் அவரிடம் கேட்கும்போது, ஆங்கு லட்சுமிக்கு, ஹான்ஸ், கஞ்சா, மது உள்ளிட்ட பழக்கங்கள் இருப்பதாகவும், அவர் சரக்கு போட்டு விட்டால், ஒரே ரகளைதான் இருக்கும் என பதில் அளித்தார்.

From around the web