நடிகர் விஜய் யின் அரசியல் ஒரு தலைமுறையின் துயரம்! ஊடகவியலாளர் மில்ட்டன் ஆவேசம்!!

நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தொகுதி மறுவரையறை வழியாக தமிழ்நாட்டுக்கு வர இருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி அடுத்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பிரத்நிதித்துவம் குறையக்கூடாது என்ற தீர்மானத்தை இயற்றியுள்ளார்.
நடிகர் விஜய் யின் தவெக சார்பில் அதன் பொதுச்செயலாளார் ஆனந்த் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் முன்னதாக விஜய் வெளியிட்ட அறிக்கை வளவளா கொழகொழா ரகமாக இருக்கிறது. நடிகர் விஜய் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று ஊடகவியலாளர் மில்ட்டன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மில்ட்டன் கூறியுள்ளதாவது,
”டெல்லி அதிகாரம், ரஜினியை வைத்து இழுத்துப்பார்த்தது, “தள்ளி நில்றா சங்கி” என அடையாளம் கண்டுவிட்டது தமிழ்நாடு. திராவிட ஆதரவு தோற்றத்திலும் மைனாரிட்டி பின்புலத்திலும் இதற்கு முன்பு இறக்கிவிடப்பட்டு பெரு வெற்றியை தங்களுக்குத் தந்த எம்.ஜீ.ஆர் Formula தான் தமிழ்நாட்டிற்கு சரி என, பால்வாடி பண்ணையார் எனும் தற்குறியை தற்போது இறக்கியிருக்கிறது. “தனக்கு ஏற்கனவே இருந்த அரசியல் ஆசையை அதிகாரம் பொருந்திய டெல்லி எஜமானர்கள் வழியே எந்த சிக்னலிலும் நிக்காமல் கோட்டையை நோக்கி பயணிக்க பெரு வாய்ப்பாக பயன்படுத்த முடிவெடுத்து இருக்கிறது இந்த விஜய் எனும் விஷம்.”
தவெக வின் இன்றைய Delimitation அறிக்கை, அதன் பின்னணியில் இருந்து வருவது தான். முழுக்க முழுக்க Bureaucrats எழுதி கொடுக்கும் குழப்பவாத விஷமத்தனமான அறிக்கை அது. சீமான், இளவரசன் படுகொலையின் போது எழுதிய அறிக்கையின் இன்னொரு வடிவம் இது. ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். அரசியலில் துடைந்து எறியப்பட வேண்டிய அசிங்கம் விஜய். விஜயின் அரசியல் இருப்பு தமிழ்நாட்டில் ஒரு தலைமுறையின் துயர பக்கம். MGR எனும் போலி பிம்பத்தை வைத்து, டெல்லி தமிழ்நாட்டை எப்படி எல்லாம் பாழாக்கியது என தேடிப்படியுங்கள். சொல்வது புரியும்” என்று குறிப்பிட்டு நடிகர் விஜய் மீது கடுமையான சொற்களால் குற்றம் சுமத்தியுள்ளார்