இனி பால் வாங்க ஆதார் கட்டாயம்.. ஆவின் நிர்வாகம் அதிரடி உத்தரவு!! 

 
Aavin

நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் சேகரிக்கப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆவின் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 25 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Aavin

ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தியபோதிலும் மக்கள் அதன் தரத்தின் மீது நம்பிக்கை வைத்து விரும்பி வாங்குகின்றனர். பால் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் அதிகாரிகள் மறுத்தாலும் பல நகரங்களில் பால் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் வேறு வழியின்றி தனியார் நிறுவனங்களின் பாலை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை சலுகையுடன் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இவ்வாறு அட்டைகள் மூலம் பால் பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Aadhar

அதாவது அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதற்கான பணியை மேற்கொள்ளுமாறும் மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

From around the web