லாரியை முந்தி சென்ற இருச்சகர வாகனம்... கீழே விழுந்த வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்!

 
Chennai

தாம்பரம் அருகே தண்ணீர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பீரவின்குமார் (27). எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவர் நேற்றிரவு 9 மணியளவில் தாழம்பூர் கூட்ரோடில் இருந்து நாவலூர் நோக்கி தனது மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

Accident

அப்போது, அதே சாலையில் சென்றுக் கொண்டிருந்த தண்ணீர் லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த மோட்டர் சைக்கிளில் மோதி பிரவீன் குமார் கிழே விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரியின் பின் சக்கரம் பிரவீன்குமார் தலை மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாழம்பூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பிரவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Pallikaranai-PS

விபத்து நடந்ததும் தண்ணீர் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web