அதிகாலை கோர விபத்து... லாரியின் பின்னால் மோதி நசுங்கிய கார்.. 2 பேர் உயிரிழந்த சோகம்!!

 
Thittakudi Thittakudi

திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து சென்னைக்கு வெல்லம் ஏற்றி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து பெரம்பலூருக்கு திருமண விழாவுக்காக கார்த்தி, சதீஷ், சண்முகம், செந்தில் ஆகிய நான்கு பேர் வந்துள்ளார்கள்.

Thittakudi

திருமண விழா முடிந்த பிறகு 4 பேரும் சென்னை நோக்கி இன்று (பிப். 12) அதிகாலை செல்லும் போது திட்டக்குடி அருகே வெங்கானூர் என்ற பகுதியில் லாரியில் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த கார்த்திக், சண்முகம் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சதீஷ், செந்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராமநத்தம் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ramanatham PS

திருமண விழாவுக்கு சென்று சென்னை திரும்பிய இருவர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web