ரகசிய கூட்டா..விஜய் மீது ஏன் வழக்கு இல்லை? திருமாவளவன் கேள்விக்கு என்ன பதில்?

 
Tirumavalavan Tirumavalavan

பாஜகவின் பி டீம் விஜய் என்று பரவலான கருத்துகள் வந்து கொண்டிருந்த வேளையில், திமுக வின் பி டீம் தான் விஜய் என்றும் சிலர் கூறி வந்தனர். கரூர் துயரச் சம்பவத்தில் விஜய் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கில் விஜய் பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இது குறித்து திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனே கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சியில் நேற்று காம​ராஜர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய திரு​மாவளவன்,  ”கரூர் விவ​காரத்​தில் அரசி​யல் ஆதா​யம் தேடு​வதற்​காக, குற்ற உணர்வு இல்​லாமல், கொஞ்​சம் கூட கவலை இல்​லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி​போட முயற்​சிக்​கிறார் தவெக தலை​வர் விஜய். அவர் ஆபத்​தான அரசி​யலை கையில் எடுத்​திருக்​கிறார். அல்​லது ஆபத்​தானவர்​களிடம் சிக்கி இருக்​கிறார்.

கரூர் விவ​காரத்​தில் விஜய் மீது தமிழக காவல் துறை ஏன் இது​வரை வழக்கு பதிவு செய்​ய​வில்​லை? தமிழக அரசும், காவல் துறை​யும் அச்​சப்​படு​கிற​தா? தவெக விஜய்க்​கும், திமுக​வுக்​கும் ரகசி​யத் தொடர்பு உள்​ளதா என்ற சந்​தேகம் எழுகிறது.

தனது கொள்கை எதிரி பாஜக என்று விஜய் கூறி வந்த நிலை​யில், அவரைக் காப்​பாற்ற பாஜக ஓடோடி வரு​கிறது. திமுக அரசை​யும், கூட்​ட​ணிக் கட்​சிகளை​யும் பலவீனப்​படுத்த விஜய் களமிறக்​கப்​பட்​டுள்​ளார். அரசி​யல் ஆதா​யம் தேடு​வதும், தமிழக முதல்​வரை சீண்​டு​வதும்​தான் அவரது நோக்​க​மாக இருக்​கிறதே தவிர, கரூர் சம்​பவம் குறித்து அவருக்கு சிறிதும் கவலை இல்​லை.

ஆர்​எஸ்​எஸ் பின்​னணி​யில் இயங்​கக்​கூடிய விஜய்​யின் அரசி​யல் தமிழகத்​தில் எடு​ப​டாது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் விஜய் எப்​போதும் இணைய மாட்​டார். அவரது நோக்​கம் திமுக கூட்​ட​ணிக்கு கிடைக்​கும் வாக்​கு​களை​யும், சிறு​பான்​மை​யினர் வாக்​கு​களை​யும் பிரிக்க வேண்​டும் என்​பது​தான்.

பாஜக அனுப்​பியது​போல, காங்​கிரஸ் கட்​சி​யும் உண்மை அறி​யும் குழுவை அனுப்​பி​வைத்​து, கரூர் சம்​பவத்​தின் உண்மை நிலையை வெளி உலகுக்கு உணர்த்த வேண்​டும்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .

From around the web