மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்.. எழுத்து தேர்வு இல்லை.. தமிழ்நாடு அரசின் அசத்தலான வேலைவாய்ப்பு!!

 
TNeGA

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அனைத்து மின் ஆளுமை திட்டத்தை மேம்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தனியாக ஏஜென்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏஜென்சி டிஎன்இஜிஏ என அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கைள நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

பணியின் பெயர்: என்ஜினீயர், டேட்டா அனலிஸ்ட், ரியாக்ட் யூஐ டெவலப்பர், சீனியர் டேட்டா அனலிஸ்ட்

காலி பணியிடங்கள்: 8 (என்ஜினீயர் - 4, டேட்டா அனலிஸ்ட் - 2, ரியாக்ட் யூஐ டெவலப்பர் - 1, சீனியர் டேட்டா அனலிஸ்ட் - 1)

jobs

கல்வித்தகுதி:

என்ஜினீயர் - பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எம்சிஏ, எம்எஸ்சி, எம்இ, எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

டேட்டா அனலிஸ்ட் - பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

ரியாக்ட் யூஐ டெவலப்பர்: பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

சீனியர் டேட்டா அனலிஸ்ட் - பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

சம்பளம்:

என்ஜினீயர் - ரூ. 45,000 முதல் ரூ.1 லட்சம் வரை

டேட்டா அனலிஸ்ட் - ரூ.45,000

ரியாக்ட் யூஐ டெவலப்பர் - ரூ.1.25 லட்சம்

சீனியர் டேட்டா அனலிஸ்ட் - ரூ.1 லட்சம்

தேர்வுமுறை:

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண், அனுபவத்தின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு தற்காலிக பணியாகும்.

application

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி மாதம் 30ம் தேதிக்குள் tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2024

From around the web