ஊருக்குள் வந்த ஒற்றை யானை! பதறியடித்து ஓடிய பொது மக்கள்!!

 
Single Elephant

ஓசூர் அருகே கெலமங்கம் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையைக் கண்டு பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர். மனிதர்கள் போல் எந்தச் சலனமும் இல்லாமல் தெருக்களில் சாவகாசமாகச் சென்று பின்னர் வயல்வெளிக்குச் சென்றது அந்த யானை.

ஊரை விட்டு வெளியே சென்றது யானையின் பிக்கமாக பட்டாசு வெடிகளை ஊர்மக்கள் வீசினர். அதைக் கேட்டும் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் நிதானமாக கடந்து சென்றுள்ளது. யானை வருவதைத் தெரிந்து கொண்ட மக்கள் சாலையிலிருந்து சென்று வீட்டுக்குள் சென்று அடைக்கலம் புகுந்து கொண்டனர். நல்ல வேளையாக வழியில் பொதுமக்கள் யாரும் எதிர்த்து வராததால் யாரையும் தாக்காமல் சென்று விட்டது.

From around the web