ஒரு கிலோ அரிசி 28 ஆயிரத்து 750 ரூபாய்? வதந்திக்கும் ஒரு நியாயம் இல்லையா?

 
Fake News

ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயரிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் அரிசி வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை ஒரு கிலோ அரிசி 23 ஆயிரத்து 750 ரூபாய் என்று திரித்து தகவல் பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் அந்த ஃபேக் செய்தியை  ”ஒரு கிலோ பச்சரிசி 23,750 ரூபாய்? தேவலோகத்தில் பகிரப்பட்டதோ?” என்று குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு இதில் ஏதோ தவறு இருக்கு என்று கணிக்க முடியவில்லையா? அல்லது அந்த ஃபேக் செய்தியையே இவங்க ஆட்கள் தான் உருவாக்குனாங்களா? வதந்தி என்றால் கூட கொஞ்சம் நியாயம் வேண்டாமா சார்?

இது பொய்யான தகவல் என தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது.” 7 ஆயிரத்து 920 மெட்ரிக் டன் அரிசி, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 24.25 வீதம் மொத்த கொள்முதல் விலை 19 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது. இவை கிலோ ஒன்றுக்கு 1 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது” என்று மறுப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


 

From around the web