ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்து சம்பாதிக்க நல்ல வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

 
Aavin

ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். ஆவின் நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

Aavin

அதன் ஒரு பகுதியாக, ஆவின் நிறுவனம் ஆவின் ஜங்ஷன் என கடைகள் மூலம் ஆவின் தயாரிப்பான ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த ஆவின் ஜங்ஷன்கள் விநியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐஸ்கிரீம் விற்பனை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆவின் பொதுமேலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Aavin

விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 17-ம் தேதி என்று தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 98942 04423, 78459 59109, 96291 78789 என்ற ஆவின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

From around the web