2 ஆண்டுகளாக பொது கழிப்பறையில் 7 மாத கைகுழந்தையுடன் வசித்து வரும் குடும்பம்.. தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

 
Vandavasi

வந்தவாசி அருகே அரசு பொது கழிப்பறையில் வசித்து வரும் குடும்பத்தினருக்கு அரசு சொந்த வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமம் அண்ணா நகர் பகுதியில் 3 தலைமுறைக்கு மேலாக வசித்து வருபவர் தினகரன். இவர் தினமும் விறகு வெட்ட செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளுக்கு சென்று தான் தன் பிழைப்பை தேட வேண்டிய சூழலில் இருந்து வருகிறார். இந்நிலையில் சளுக்கை கிராமம் அண்ணாநகர் பகுதியில் அரசு சார்பில் பொது கழிப்பறை சுமார் 3 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.

Vandavasi

இந்த நிலையில் தினகரன் தனது தாய் தந்தையை இழந்த நிலையும் வீடும் நான்கு வருடங்களுக்கு முன் மழையால் இடிந்து விழுந்து சேதம் ஆகியுள்ளது. அதுவரை தினகரன் தனது தம்பி வீட்டிலே வசித்து வந்த நிலையில் தினகரனுக்கும் பொன்னியம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆனவுடன் தினகரன் பொன்னியம்மாள் தம்பதிகள் வீடு இல்லாமல் தவித்து வந்தனராம். தங்களின் தேவைகளுக்கு பேசுவதற்கே தெரியாத அறியாமையில் இருந்து வரும் தினகரன் அரசு கட்டிக் வைத்திருக்கும் அரசு பொதுக் கழிப்பறையை தனது இல்லமாக பயன்படுத்த தொடங்கினார்.

திருமணம் ஆன நாள் முதலே இவர்கள் சளுக்கை அண்ணாநகர் பகுதியில் அரசு பொது கழிப்பறை கட்டடத்தில் குடியேறி தற்போது வரை குளியல் அறையை தாங்கள் படுக்கையாகவும் கழிப்பறையை பொருட்கள் வைக்கும் அறையாகவும் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சரண்குமார் என்ற ஆண் குழந்தையை பெற்ற இந்த தம்பதிகள் இந்த அரசு பொது கழிப்பறையிலே வாழ்ந்து வருகின்றனர்.

Vandavasi

இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தசரதராமன் ராஜன் பாபு மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட நபர்களின் பட்டாவை சரிபாகமாக 3 பேர் மீது பிரித்து எழுதி அவர்களுக்கு வீடு வழங்குவதற்கான ஆணையை பெற்று தருவதாக கூறி உள்ளனர்.மேலும் பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை செய்ததில் அவர்களுக்கு பிரதம மந்திரியின் வீடு ஒதுக்கி தரப்படும் மற்றும் அவர்களுக்கு உடனடியாக இரும்பு தகர சீட்டின் மூலமாக தற்காலிக வீடு அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து சென்றுள்ளனர்.

From around the web