தீயாய் பரவும் நோய்.. ஒரே நாளில் 5 பேர்.. மருத்துவரை தொடர்ந்து மருத்துவ மாணவிக்கு காய்ச்சல்!

 
Dengue

திருவாரூர் மாவட்டத்தில் இன்று மட்டும் மருத்துவ மாணவி உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

Dengue

இந்த நிலையில், கேரளவைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிந்து, அதே மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மட்டும் ஹோமியோபதி மருத்துவ மாணவி உள்பட 5 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இருபது நபர்கள் காய்ச்சல் காரணமாக உள் நோயாளிகளாக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tiruvarur

மாவட்டம் முழுவதும் இதுவரை 9 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web