தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு உடல் சிதறி கல்லூரி மாணவி பலி..!! செல்போன் பேசியதால் விபரீதம்.!

 
Chennai

தாம்பரம் அருகே செல்போன் பேசி கொண்டே தண்டவாளத்தை கடந்த மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த நிகிதா என்ற பெண் சென்னையில் தங்கி தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். மாணவி நிகிதா பிஎஸ்சி சைக்காலஜி படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி நிகிதா தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது மாணவி நிகிதா போன் பேசிய படி சென்றதால் ரயில் வருவதை கவனிக்கவில்லை.

train-suicide

அப்போது, சென்னை எழும்பூரில் இருந்து வண்டலூர் நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் விரைவு ரயில் அந்த மாணவி மீது மோதியது. இதில், நிகிதா தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து இன்று காலை 9.30 மணிக்கு நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிகிதா உடலை கைப்பற்றி பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tambaram

செல்போன் பேசிய படி ரயில் தண்டவாளம், சாலையை கடக்க வேண்டாம் என எவ்வளவு அறிவுரை வழங்கினாலும் கேட்காமல் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக தாம்பரம், பெங்களத்தூர் பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web